எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும் 🙏🏼
அன்று காலை நேரம், அவசரமாக பசியுடன் இருக்கும் தன் குழந்தைக்கு சமைத்து கொண்டு இருந்தாள். மனதுக்குள் வேலை ஆள் வைத்து பயன் இல்லையே. எப்போது அத்யாவசியமோ அப்போது உதவி கிடைக்காமல் போகிறதே என்ற எண்ணம். இளகிய மனம் படைத்த அவளாள் அத்தனை சீக்கிரம் இன்ரோடு நின்று கொள் என கூற மனம் இல்லை. சில சமையம் பொருமை இழந்து கோபம் வந்தாலும் தனக்கு தானே சமாதானம் சொல்லும் ஒரு சராசரி பெண். இரண்டு குழந்தைகள் வைத்துக்கொண்டு தினமும் புலம்பும் வேலை ஆள் நினைத்து பரிதவிப்பாள். ஆனால் இம்முறை அவள் மனம் அவள் நிலைப்பாட்டை கேள்வி கேட்டது. அன்பே உருவானவளே, இல்லை இல்லை, அறிவு கெட்டவளே, தன்னை அறிந்த முட்டாளே, ஏன் நீ வார்தைக்கும் செயலுக்கும் இருக்கும் தூரத்தை உணருவதில்லை என தன்னை தானே திட்டிக் கொண்டாள். இந்த கோவிட் காலத்தில் பலர், பல காரணங்கள் கூறி வேலை ஆட்களை அம்போவென்று கழற்றி விட சிலர் வசதி பட்டவர் வேலை செய்ய முடியாது போனாலும் முழு சம்பளம் கொடுத்தனர் அவளைப் போல். இப்படிப்பட்ட சூழலில்,
இருந்த அத்தனை வீட்டையும் இழந்து புலம்பிக்கொண்டிருக்கும் அவளை நினைத்து மனம் இளக, இன்னொரு புரம் தூரத்து சொந்தம் கல்யாணம் உள்ளூரில் இருந்தாலும் வேலைக்கு வர இயலாது என்றாள். மனிதனின் இயல்பு எத்தனை விந்தையானது, தன் ஜீவிதம் கேள்வி௧் குரியாய் இருப்பினும் தன் சுற்றம் என்ன சொல்லும், கேளிக்கை துறக்க மனம் இல்லை, மற்றும் சம சீர் மனோ பாவம் இன்மை காரணங்களாள் ஆளப்படுகிரொம் என்று எண்ணிணாள். சரி விடு, இன்னும் ஒரு பத்து நாள் சமாளிப்போம் மனம் இருந்தால் மார்கம் உண்டு என்று எண்ணி ஆமோதித்தாள். ஆனால் அன்று நடந்த வேறொரு நிகழ்வு அவள் மனதை சலசலக்க செய்தது. அன்டை வீட்டில் வசிக்கும் வயது முதிர்ந்த தம்பதியினர் மிகவும் அன்பும் பண்பும் மிக்கவர். அந்த முதிர்ந்த பெண் வீட்டின் கதவைத் தட்டி உனது வேலை ஆளிடம் பேச வேண்டும் என்றார். வேளை ஆள் வெளியே வந்து விசாரிததில் இன்றுலிருந்து வேலைக்கு வர இயலுமா பெரும் உதவியாக இருக்கும் நியாயமான கூலி எதுவாய் இருப்பினும் தருகிறோம் என்றார். இதை கேட்ட அந்த சராசரி பெண்ணுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தது மனம். அப்பாடா இன்னும் ஒரு வீடு கிடைத்தது என்று. அப்போது வேலை ஆள் சொன்ன பதில் அவளை அதிர்ச்சியில் ஆழ்தியது. நான் பத்து நாள் கழித்து ஒன்றாம் தேதியிலிருந்து வருகிறேன் என்றாள் வேலை ஆள். மற்றவர் விவகாரங்களிள் சற்றும் நுழைய விரும்பாதவளாய் இருப்பினும் தயங்கி உதவி கேட்டு தேவை இருக்கும் முதியவரை பார்த்து சற்று முந்தி கொண்டு வேலை ஆளிடம் என் வீட்டில் இன்று வேலை செய்வதற்கு பதிலாக நீங்கள் அங்கே செய்யுங்களேன் அப்புறம் கல்யாணத்தில் இருந்து வந்தவுடன் இரண்டு வீட்டிலும் செய்யலாம் கணக்கு போட்டு வேலைக்கான கூலி கொடுக்க சொல்கிறேன் என்றாள். முதியவருக்கு மகிழ்ச்சி, புன்முறுவினார். அதையும் மறுத்து விட்டு அடுத்த மாதம் வருகிரென் என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள். இந்த சம்பவம் அவள் மனதில் ஆழமாய் பதிந்தது. அவள் மனம் கேட்டக் கேள்வி இன்னமும் மனிதர்கள் மனதில் ஈரம் உண்டா என்பது. இந்த எண்ணத்துடன் வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்து விட்டு ஆபீஸ் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விரைந்தாள்.
வாசல் அழைப்பு மணி ஒசை கேட்டு கதவை திறந்தாள். “அக்கா பூ வேணுமா” என்ற தமிழை கேட்டவளுக்கு கொள்ளை ஆனந்தம். வெளி மாநிலத்தில் வாழும் அவளுக்கு “தேன் வந்து பாய்ந்தது காதினிலே”. சந்தோஷமாக இரண்டு ழுழம் ஐாதி பூவும் கை நிரைய அழகிய சிகப்பு பட்டன் ரோஐா வாங்கினாள். சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவங்களையும் மிகவும் நெகிழ்சியுடன் ரசிக்கும் மனம். பார்பவர்கு கொஞ்சம் வித்யாசமாகவும் நடகமாகவும் (Cliche) தோன்றும். ஆனால் அவள் கண்கள் மற்றும் எண்ணம் தனித்துவம் மிகுந்தது. பிறர் தன்னை எப்படி எடை போடுவார் என்று யோசிக்க பிரயத்தனம் காட்டாதது சற்று குறைபாடே ஆனாலும் அவளுக்கு அதுவே அழகு சேர்கும் தனித்தன்மை. அவளின் ரசனையை உயர்தி பிடிக்கும் வலிமை.
அந்த பூக்காரப் பெண், “அக்கா உங்க வீட்ல வேலை செய்ய ஆள் வேணுமா” ?, என் கணவர் காலமாகி கொஞ்ச மாசமாச்சு, கடன் சுமையில் இருக்கேன், மூனு படிக்கர பசங்க எனக்கு, சமையல் மேல் வேலை சுத்தமா செய்வேன் என்றாள். கோவிட்டி னால் வேலை இழந்த பலரில் அவளும் ஒருத்தி. அவள் கூறியவுடன் ஒரு நிமிடம் மனம் த்யானித்து நியாய தர்மங்கள் அலசி, சரி என்றாள். அப்பெண் பேசிய தொகை நியாயமாய் இருக்க நாளை வேலைக்கு வரலாம் என்றாள்.
உங்கள் உள்ளம் சொல்வது சரி, இவள் அல்ல அந்த கருப்பு தேவதை !
அடுத்த நாள் காலை எட்டு மணி. வாசலில் அழைப்பு மணி அடிக்க கதவைத் திறந்தாள். எதிரே இரண்டு பெண்கள். ஒருவர் முன் தினம் வேலை கேட்டு நின்ற பெண் மற்றொருவர் அவரிலும் முதிர்ந்த பெண். அக்கா எனக்கு இந்த நேரம் சரிபட்டு வரல எங்கம்மா வருவாங்க பேசினபடி இத்தனை தொகை என்று புதிதாய் ஒரு தொகையை கூரினாள். அவ்வளவு தான் தலையில் பூகம்பமே வந்த சராசரி பெண்ணாய் மௌனமானாள்.
இது என்னடா திரும்பவும் போராட்டம் என மனம் தோன்ற, இன்னொரு புரம் வெட்டி விஷயங்களுக்கு மனதை அலட்டி கொள்ளக்கூடாது என உறுதி பூன்டாள். சரி, ஆனால் ஒரு நிபந்தனை ஞாயிரு வேலை ஆட்களுக்கு கட்டாய விடுமுறை என்பதால் அடிக்கடி லீவு எடுக்க வேண்டாம் என்றாள். அந்த முதிர்ந்த பெண்ணும் ஆமோதித்தாள். இந்த வேலைகளுக்கு முன் பணம் கொடுக்கும் பழக்கம் அல்ல ஆனால் மாதம் முழுவதும் வேலை செய்து சம்பளத்திற்கு முதல் தேதிக்கு காத்திருப்பது நியாயமாய் தோன்றவில்லை அதனால் கேட்காமலே முன் பணம் கொடுத்தாள் முதல் நாளே.
அடுத்த நாள் புது வேலை ஆள் வரவில்லை பொருமையாய் நாள் முழுவதும் காத்திருந்தாள். மறு நாளும் அதே கதை. சாதாரணமாக மனம் சலனப்படும், பல கற்பனைகள் தோன்றும் ஆனால் இம்முறை அவள் மனம் அவள் வசம் இருந்தது. அது தேவை இல்லாத சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கவில்லை. அமைதியாக இருந்தது. அவள் வாழ்வில் சற்றே தாமதமாக கற்றுக் கொண்ட பாடம் இது. மறு நாளும் ஒரு சேதியும் இல்லை.
மூன்று நாள் கழித்து மெதுவாய் அந்த முதிர்ந்த பெண் வீட்டுக்கு வந்தாள். ஒரு நிர்பந்தத்தால் என்னால் வர முடியவில்லை நீங்க போன்ல கூப்பிடுவீங்கனு நெனச்சேன் என்றாள். அதற்கு அவள், “காரணம் இல்லாமல் நீங்க வராமலோ சொல்லிவிடாமலொ இருக்க மாட்டிங்க” எதாவது சங்கடத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நினைத்தேன் என்று கூரிவிட்டு சுட சுட இட்லியும் தேங்காய் சட்னியும் அவளுக்கு மிகவும் பிடித்த பீங்கான் தட்டில் அலங்காரமாய் கொடுத்தாள். மற்றவர்களுக்கு உணவளிப்பதே எந்த பெண்ணுக்கும் உச்ச கட்ட சந்தோஷம். அந்த சராசரி பெண் மிகுந்த ஆனந்தத்துடன் தன் அலுவலக வேலைகளை ஆரம்பித்தாள். ஆழமான அழகான உறவிர்கு இதுவே ஒரு அடித்தலம் என தெரியாமல், இந்த முதிர்ந்த கருப்பு தேவதை அவள் வாழ்வில் ஒரு வரமாய் வந்தாள் என்பது அவளுக்கு அன்று தெரியாது.
To be continued…!
Expressions