உறக்கம்

உறக்கம் ஒரு வரம்.குழந்தையாய் இருக்கும் போதுஉறக்கம் ஒரு எதிரிவிளையாட்டைத் தடுக்கும் பூச்சாண்டி,பருவ வயதில் அதுவே ஒரு சாக்குபகல் கனவில் தொய்ந்துப் போக,வாலிப வயதில் அவனே ஒரு நண்பன் சிலருக்கு சிற்றின்பம்சிலருக்கு நட்புசிலருக்கு உயர்ந்த லட்சியம்இதனை அடைய கிடைத்த வரப்பிரசாதம் கூடுதல் மணித்துளிகள்,நாய் வயதில் கிடைத்த வடிகால் போராட்டங்களுக்கு இடையில் வரும் விடுமுறை,வயதானக் காலத்தில் ஒரு பயாஸ்கோப் எப்போதும் மலரும் நினைவுகளை அசைப் போடும் மனதிற்க்கு தனிமை வரம் அளிக்கும் பொக்கிஷம்.