வாழ்க்கை ஓட்டம்

எங்கே வேகமாக ஓடுகிறாய்சேரும் புள்ளி ஒன்றாய் இருக்கநிதானமே நிம்மதிரசித்து இரு ! எப்படி ஓடினும்பிரபஞ்சத்தின் கணக்குஒரே புள்ளியில் உன்னைகொண்டு அடக்கும் ! Prasha 👑

நண்பன் தேர்வுக்கான தேவைகள் ❤ (Qualifications required for a friendship)

யாருக்கு வேண்டும் உங்கள் பணம், புகழ், பலம் மற்றும் அதிகாரம் அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ! உங்களிடம் உள்ளதா அனுபவப் பாடங்கள் எதார்தக் கதைகள் மென்மையான உள்ளம் ஒயாக் கனவுகள் மற்றும் இயர்கையின் ரசனை அப்படியெனில் நீங்கள் என் நண்பன் ! இப்படிக்கு Prasha 👑

உறக்கம்

உறக்கம் ஒரு வரம்.குழந்தையாய் இருக்கும் போதுஉறக்கம் ஒரு எதிரிவிளையாட்டைத் தடுக்கும் பூச்சாண்டி,பருவ வயதில் அதுவே ஒரு சாக்குபகல் கனவில் தொய்ந்துப் போக,வாலிப வயதில் அவனே ஒரு நண்பன் சிலருக்கு சிற்றின்பம்சிலருக்கு நட்புசிலருக்கு உயர்ந்த லட்சியம்இதனை அடைய கிடைத்த வரப்பிரசாதம் கூடுதல் மணித்துளிகள்,நாய் வயதில் கிடைத்த வடிகால் போராட்டங்களுக்கு இடையில் வரும் விடுமுறை,வயதானக் காலத்தில் ஒரு பயாஸ்கோப் எப்போதும் மலரும் நினைவுகளை அசைப் போடும் மனதிற்க்கு தனிமை வரம் அளிக்கும் பொக்கிஷம்.